வாகன போக்குவரத்தின் போது அறவிடப்படும் தண்டப்பணம் தொடர்பில் திருத்தப்பட்ட பட்டியல் அடுத்த வாரம்…

வாகன போக்குவரத்தின் போது இடம்பெறும் குற்றச் செயல்களுக்கான தண்டப்பணம் தொடர்பில் திருத்தப்பட்ட பட்டியல் அடுத்த வாரமளவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அ மைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வாகனங்களின் குற்றச் செயல்களுக்காக புதிய அபராத பட்டியலை இறுதி செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த திருத்தப்பட்ட பட்டியல், முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்து சங்கங்களுக்கு கையளிக்கப்படும்.

அத்துடன், குறித்த சங்கங்களிடம் அந்த சட்டமுலம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களின் யோசனைகளும், பரிந்துரைகளும் பெற்றுக் கொள்ளப்படும். அதன்படி குறித்த சட்டமூலத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்

இதேவேளை, போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பங்களிப்புடனான கூட்டத்தில் அந்த துறைசார்ந்தவர்களுக்கு அபராத பட்டியல் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.