(FASTNEWS|COLOMBO) – திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டதிலே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 28 வயதிடைய குச்சவெளி – செந்தூர் – மதுரங்குடா பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.