வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 08 பேர் காயம்…

(FASTNEWS|COLOMBO) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருதுகஹஹெதெக்ம  நுழைவாயில் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கொடகம பகுதியில் இருந்து கடவத்த திசையில் பயணித்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் நாகொட மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.