வாகன விபத்தில் தாயும், இரண்டு மகள்களும் உயிரிழப்பு…

அக்கறைபற்று – பொத்துவில் பிரதான வீதியில் நேற்றிரவு(24) இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், அவரது இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.