வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் நேற்று முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

48 வயதுடைய தாய் , தந்தை மற்றும் 12 வயதுடைய மகன் உள்ளிடவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.