வாகன விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

மொனராகல – வெல்லவாயவில் கும்புக்கன்ன பகுதியில் நேற்றிரவு(04) இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.