முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புமனு வழங்கியமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களையும் 6அடி நிலத்திற்குள் தள்ளும் செயல் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசியரியர் சரத் விஜேயசூரிய தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கக்கூடாது எனத் தெரிவித்து கொழும்பு கோட்டையில் நேற்று பிற்பகல் பேரணி ஒன்று இடம்பெற்றது.
அந்நிகழ்வில் பேராசியரியர் சரத் விஜேயசூரிய இக்கருத்தை முன் வைத்தார்.
அத்துடன் இதில் கலந்து கொண்ட தீபானி சில்வா கலாகாரினிய கருத்து தெரிவிக்கும் போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் இழைத்துவிட்டதாக குறிப்பிட்டார்.
(riz)