வாக்குச் சாவடிகளில் பிரச்சினை விளைவிப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த அதிகாரம்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று(10) சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மீளவும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை எவரேனும் மதுபோதையில் வாக்குச் சாவடிகளில் பிரச்சினை விளைவிப்பார்களால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மதுபோதையில் இருக்கும் நபர்களை தம்முடன் வைத்துக் கொள்ளக் கூடாது. பிரச்சினை விளைவிக்கும் நபர்கள் உள்ளூராட்சி தேர்தல் கட்டளை சட்டம், குற்றவியல் கோவை ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குச் சாவடிகளில் பிரச்சினை விளைவிப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#rishma…