பொதுத் தேர்தலின் நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (16) காலை 7.30 இற்கு ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் தலைமையின் கீழ் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லுதல் மற்றும் கண்காணிப்பு உத்தியோகஸ்தர்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைத்தல் போன்றன இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார்