வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளையுடன் நிறைவு

2015 பாராளுமன்ற தேர்தலின் பொருட்டு இதுவரை 15 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளை நாளைய தினத்திற்குள் நிறைவுசெய்ய முடியுமென எதிர்ப்பார்ப்பதாக அரச அச்சக அதிபர் காமினி பொன்சேகா குறிப்பிடுகின்றார்.

இதுவரையில் 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல்கள் செயலகம் ஊடாக வாக்குச் சீட்டுக்களை மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச அச்சக அதிபர் கூறினார்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலின் மிக நீளமான வாக்குச் சீட்டு கொழும்பு மாவட்டத்திற்காக அச்சிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்காக 25 அங்குலம் நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்குகளை எண்ணும் பணிகளுக்கான ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்