மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரத்தை 14 நாட்களுக்குள் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்ததாகவும் குறித்த காலக்கேடு எதிர்வரும் 14ம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாகவும், அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
காலம் நிறைவுக்கு வரும் முன்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட முடியாது போனால் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
அது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன; மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரத்தை வர்த்தமானியில் வெளியிட வருடக் கணக்கில் தாமதித்தது அரச வைத்திய அதிகாரிகளது சங்கம் என தெரிவித்துள்ளார்.
குறித்த குறைந்தபட்ச தரத்தை தயார் செய்ய பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலினையும் குறித்த மருத்துவ சங்கம் புறக்கணித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும், குறித்த சட்டம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மொழி பெயர்ப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
(rizmira)