கூட்டு எதிர்க்கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பிலான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஏழு பேர் உள்ளிட்ட எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் அமைச்சரவை அமைச்சர்கள் மூவருடன் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது குறித்து மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடனும் இந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொறுப்புக்கள் மற்றும் பதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி பரிந்துரை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எட்டு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வது குறித்து கூட்டு எதிர்க்கட்சி எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.