‘வாட்ஸ்-அப்’ பாவிக்கும் இளம் தலைமுறைக்கு சிறைத் தண்டனை பின்தொடருகின்றதா

அரபு நாடுகளில் வசிப்பவர்கள் ‘வாட்ஸ்-அப்’பில் குறுஞ்செய்திகளை அனுப்பும் போது இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சக்கணக்கான ரூபாய் அபராதத்துடன் சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும்.

உலகம் முழுவதும் ‘வாட்ஸ்-அப்’பில் குறுஞ்செய்திகள், படங்கள் அனுப்புவது அதிகரித்த நிலையில் குற்றங்களும் அதிகரித்து உள்ளன.

இதனை தடுக்க ஐக்கிய அரபு நாடுகளில்புதிய சைபர் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.புதிய சட்டத்தின்படி வாட்ஸ்-அப் தகவலில் இழிவான, அவமரியாதைக்குரிய சொற்கள் அல்லது படங்களை அனுப்பினால் சிறை தண்டனையுடன் 42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.உள்நாட்டினருக்கு இந்த தண்டனை என்றால் அரபு நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு அவர்களின் குடியுரிமையும் பறிக்கப்படும்.