பாலிவுட் பிரபல நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரின் போது, வான்கடே மைதானத்துக்குள் நுழைய வந்த கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கானை தடுத்து நிறுத்தினர்.
இதனை அடுத்து அவருக்கும் பாதுகாவலர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து பாதுகாவலர்களை ஷாருக்கான் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்று கூறப்படுகிறது. இது குறித்து புகார் செய்யப்பட்டதை அடுத்து வான்கடே மைதானத்துக்குள் ஷாருக்கான் நுழைய 5 ஆண்டுகள் தடை விதித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக குழு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று விலக்கி கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஷாருக்கான், எம்.சி.ஏ. தலைவர் சரத் பவாரிடம் தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலினை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாக கூறப்படுகிறது.
(riz)