வாரிசுக்கு “Blush” எனப் பெயரிட்டுக் கொஞ்சும் Gayle (Photos)

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்லுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மேற்கிந்திய தீவு அணி வீரர் கிறிஸ் கெய்ல் IPL போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இவரது மனைவி நடாஷா பெரிட்ஜிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, இதனால் தாயம் திரும்பிய கெய்ல் அடுத்த இரண்டுபோட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கெய்ல் தனது Instagram பக்கத்தில், ”என்னுடைய அழகான மகளை வரவேற்கிறேன், குழந்தை ஆரோக்கியமாக உள்ளது, இதனால் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் தனது குழந்தைக்கு, ப்ளஷ்(Blush) என பெயரிட்டுள்ளார்.