வார்னரின் கலாய்ப்பிற்கு தெறிக்க ஓடிய முரளி (VIDEO)

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஐதராபாத் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக ஐதராபாத் வீரர்கள் தாங்கள் தங்கி இருந்த ஹொட்டல் நீச்சல் குளத்தில் அடிக்கும் வெயிலுக்கு இதமாக குளியல் போட்டனர்.

அங்கு அணித்தலைவர் வார்னர், வில்லியம்சன், தவான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கைப்பந்து விளையாடி நேரத்தை கழித்தனர்.

அப்போது நீச்சல் குளத்தை விட்டு வெளியேறும் போது வந்த முரளிதரனை, வார்னர் கலாய்க்க அழைத்தார். அதை பார்த்த முரளிதரன் விழுந்தடித்து ஓடியே விட்டார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்ஜாம்பவானான முரளிதரன் ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=3n_7Tbqxt0w” width=”560″ height=”315″]