முத்தரப்பு ஒருநாள் தொடரில் கடந்த ஞாயிறன்று(27) நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் அசத்திய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
குறித்த இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது வால்லெரின் பிடியெடுப்பை எடுத்த சச்சித் பத்திரன அதை சக வீரர்களுடன் கொண்டாடினர்.
அப்போது நடுவில் வந்த நடுவரிடமும் தனது மகிழ்ச்சியை தெரிவிக்க முற்பட்டு பின்னர் சிரித்தபடி விலகிச் சென்றார். அவரது இந்த செயல் ரசிக்கும் படியாக அமைந்தது.
தொடர் ஆட்டநாயகன் விருது மற்றும் ஆட்டநாயகன் விருது இரண்டும் குஷால் மெண்டிசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=NL7UTwIsETo” width=”560″ height=”315″]