வாழைப்பழ தோலில் அதிகளவு சத்துக்கள் இருக்கிறது. நார்சத்தும் உள்ளது. இதிலுள்ள B6 மற்றும் B12 உடலிலுள்ள நொதிகள் மற்றும் புரோட்டினை ஊக்குவிக்கிறது. இதனால் கொலாஜனும் அதிகரிக்கிறது.
இயற்கையான ப்ளீச்சிங் :
ஒரு வாழைப் பழ தோல் மற்றும் 2 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பால் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இதனுடையை ப்ளீச்சிங் குணம் சருமத்திலுள்ள அழுக்கு, செல்களை அகற்றி நிறத்தை தரும்.

சரும டோனர் :
வாழைப்பழத் தோலை முகத்தில் தேயுங்கள். தோல் நிறம் பிரவுனாக மாறும் வரை தேய்க்கலாம். பின்னர் 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். சருமம் பளபளக்கும்.

கருவளையம் மறைய :
வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக மசித்துக் கொள்லுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாரு செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.
