வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் இன்று(10) உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வர்த்தகர் முஹமட் சியாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவருக்கு, மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 27ம் திகதி இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இன்று இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.