நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை எதிர்வரும் செப்டெம்பர் 07 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததற்காக வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.