அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்தி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்கத் தயார் என இராணுவம் தெரிவித்துள்ளது.
அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடயங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கின் இனவாத நகர்வுகளும் அதன் மூலமாக விக்னேஸ்வரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறு இராணுவம் தெரிவித்துள்ளது.
வட மாகாண முதலமைச்சருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் நகர்வுகள் என்பது தொடர்பாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் செனவிரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.