விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல.

அரசாங்கத்தின் அச்சாணி வடமாகாண சபையிடமே உள்ளது.

வட மாகாணத்தின் தேவைக்கேற்ப அடிபணிந்தும் அஞ்சியுமே அரசாங்கம் செயற்படுகின்றது.

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூற விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல.

யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என்ற வகையில் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கருத்துக்களை முன்வைத்ததாக கடந்த வாரத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்துக்கூறிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை முழுமையாக அழித்துவிட்டதாக குறிப்பிட்டாலும் அவை இலங்கையில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சர்வதேச அளவில் புலிப் பயங்கரவாதம் இன்னமும் பலமாகவே செயற்படுகின்றது.