விசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி முதல்…

பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, விசேட மேல் நீதிமன்றத்துக்கு  03 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த நீதிமன்றம் ஜூலை 15ஆம் திகதி முதல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் ஜம்பா ஜானகி ராஜரட்ன ஆகியோரே, பிரதம நீதியரசர் பிரசாத் டெப்பினால், கடந்த 22ம் திகதி நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.