விசேட மேல் நீதிமன்றின் முதலாவது வழக்கு விசாரணை அமர்வு நாளை(24)…

வழக்கு விசாரணை தாமதமடைவதைத் தடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கை விசாரிப்பதற்கான அமர்வு நாளை(24) இடம்பெறவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக தலைமை அதிகாரியாக செயற்பட்ட காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, விசேட மேல் நீதிமன்றத்தில் நாளை(24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசேட மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, ஆகியோரும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோரும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.