தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழில் ஆற்றிய உரையை, சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, இன்று(13) அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி உரையைப் பதிவு செய்த ஒலி நாடாக்களை, ஊடகங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, அவற்றில் இரண்டை, நீதிமன்றத்தில் கையளிக்குமாறும், குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
R.Rishma