தமிழ் விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை வன்மையாக கண்டிப்பதாக வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேலியகொட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் தெரிவித்துள்ளார்.