விஜயகலாவின் கருத்துக்கு ரஞ்சன் எதிர்ப்பு…

விடுதலை புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தானது பொறுத்தமற்றதாகும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இது குறித்து தெரிவிக்கையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஹிட்லருக்கு நிகராக கருத்துத் தெரிவித்ததனைப் போன்று இதுவும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்திருந்தார்.

“ஹிட்லரின் கருத்தினைப் போன்றே இதுவும் பொருத்தமற்ற, நாம் அனைவரும் கண்டிக்க வேண்டியதொரு கருத்தாகும். நாம் நன்றாக அறிவோம் விடுதலைப் புலிகள் பொதுமக்களையும் குழந்தைகளையும் கொலை செய்து அவர்களது சட்டத்தினை நடைமுறைப்படுத்தியதினை.. எமக்கு பிரபாகரனோ ஹிட்லரோ தேவையில்லை…”