தமிழ் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் கொண்டுவர வேண்டும் என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கருத்து தெரிவித்த காணொளியை, குற்றப்பலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க 05 ஊடக நிறுவன பிரதானிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாகல் கந்தே சுதந்த தேரர், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கடந்த 02 ஆம் திகதி, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றிலேயே இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.