விஜயகலா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கம்..?

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று(12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இந்த சம்பவம் தொடர்பில் ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.