விஜயகலா பதவி நீக்கம் குறித்து பரவும் செய்திகளில் உண்மையில்லை…

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து இன்று(04) அவருக்கு எதிராக நடாத்தப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு வருகை தருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரீன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

இன்று அவருக்கு எதிராக நடாத்தப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணையின் பின்னரே தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும், இராஜாங்க அமைச்சரை பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அமைச்சர் ஹரீன் இதன்போது தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.