அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்த, முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று(24) திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 3 மணி நேரம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியை எழுச்சிக்காகவேயன்றி , விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளெழுச்சிக்காக உரையாற்றவில்லையென்றும், குறித்த உரை கடுமையானதொன்றென தான் உணர்ந்தது குறித்த உரையின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா தெரிவித்திருப்பதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
குறித்த விசாரணையானது மாலை 3.00 மணியிலிருந்து 6.00 மணி வரை இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma