நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கிய விஜயதாச ராஜபக்ஷவை ஐக்கிய தேசிய கட்சியின் மஹரகம தேர்தல் ஆசன அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய குறித்த இத்தீர்மானம் எட்டப்படவுள்ளது.
குறித்த தொகுதி ஆசனமானது ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததும் அவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, மற்றுமொரு தகவலின்படி தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலின் பணிப்பாளர் மற்றும் இளைஞர் முன்னணியின் தலைவர் சட்டத்தரணி எரங்க வெலிஅங்க அவர்கள் குறித்த பதவிக்கு நியமிக்கப்படலாம் எனவும் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(rizmira)