விஜயை இன்னும் காதலிக்கிறேன் – பழைய காதலில் உருகும் அமலா..

நடிகை அமலாபால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை என தீர்மானித்து இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறிவந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே என 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விவாகரத்து முடிவு குறித்து பேசிய அவர், ” நான் விஜய்யை இன்னும் காதலிக்கிறேன்.

காதலித்துக் கொண்டே இருப்பேன். விட்டுவிடுவதும் காதல்தான். நான் 23 வயதில் திருமணம் செய்துகொண்டேன். அதுதான் நான் செய்த தவறு” என கூறியுள்ளார்.