(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விஜய்யின் 65ஆவது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய்யின் 65ஆவது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான மடோனா, தமிழில் காதலும் கடந்து போகும், ஜூங்கா, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தளபதி 65 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா நிலமையில் இருந்து வழமைக்கு திரும்பிய பின்னர் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.