அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் விஜய் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை காஜல் அகர்வால் மனம்திறந்து பேசியுள்ளார்.
“விஜய்யுடன் இந்த படத்திலும் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம். குறிப்பாக அவருடன் நடனம் ஆடுவது தனி அனுபவம். அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஆடுவது சவாலானது. அவருடன் நடனமாடுவது அவ்வளவு எளிதானதல்ல. கொஞ்சம் கஷ்டமானது என்று கஜல் கூறியிருந்தார்.
ஒரு சில அசைவுகளை அவர் மிகவும் வேகமாக செய்துவிடுவார். எனவே, அதுபோன்ற நடன அசைவுகளுக்கு ஆடுவதற்கு முன்பு அவருடன் சேர்ந்து ஆடி ஒத்திகை பார்த்துக்கொள்வேன். இல்லையென்றால் பல ‘ரீடேக்’ வாங்க வேண்டிய நிலை வந்துவிடும்” என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.