இளைய தளபதி விஜய் எப்போதும் வளர்ந்து வரும் நடிகர்களை ஊக்குவிப்பவர். அதிலும் சிம்புவின் வாலு படத்திற்கு அவர் செய்த உதவி எல்லோரும் அறிந்தது தான்.
இந்நிலையில் விஜய் அட்லீ படம் முடிந்த கையோடு முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.
மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சிம்பு கமிட் ஆகவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது, இந்த செய்தி ரசிகர்களுக்கு ஷாக் மட்டுமின்றி கொண்டாட்டமாகவும் அமைந்துள்ளது.