விஜய்யுடன் மோதும் கார்த்தி..

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படம் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கார்த்தி பொலிஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தின் பிரதான படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை தீபாவளி விடுமுறையில் மெர்சலுடன் வெளியிட முடிவு செய்துள்ளனர்.