(FASTGOSSIP|COLOMBO) இயக்குநர் விஜய்யும், நடிகை சாய் பல்லவியும் திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவலுக்கு விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்து ஒருவருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர்.
கங்கனா ரணாவத் நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படத்தையும் இயக்க தயாராகி உள்ளார். இந்த நிலையில் விஜய்க்கும், நடிகை சாய் பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர். விஜய் இயக்கிய தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்திருந்தார்.
விஜய்க்கும், சாய் பல்லவிக்கும் ‘தியா’ படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவி உள்ளது.
இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறும்போது, “என்னையும், சாய் பல்லவியையும் இணைத்து வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. திருமணம் குறித்து நான் சிந்திக்கவில்லை. பட வேலைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்” என்றார்.