ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமியின் கதாபாத்திரம் என்னவென்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். விவசாயமும், அரசியலும் கலந்த கதையாக இது உருவாகிறது.
இதில் ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் அரசியல்வாதிகளாக வருகிறார்கள். இவர்களுடன் விஜய் மோதுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் ஜோடியாக இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமியும் இதில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார், வரலட்சுமியும் அரசியல்வாதியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் திரிஷா அரசியல்வாதியாக எதிரான வேடத்தில் நடித்தார். அதுபோலவே, வரலட்சுமிக்கும் இந்த படத்தில் எதிர்முனையில் மோதும் அரசியல்வாதி வேடம். இந்த பாத்திரத்தின் மூலம்தான் கதையில் அதிரடியான திருப்பங்கள் வருகின்றன. எனவே, வரலட்சுமி வேடம் இதில் மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.