(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் ‘தளபதி 64’ படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் 40 நாட்கள் தொடர்ச்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு படப்பிடிப்புக்கு பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
காற்றுமாசு காரணமாக படப்பிடிப்பு நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், குறைவான நேரம் மட்டுமே விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.