அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒருவர் இணைந்திருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இவர்களுடன் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் இணைந்திருக்கிறார். இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு கானா பாடல் பாடும் வாய்ப்பும் கபீஸ் பூவையாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.