விஜேதாசவை நீக்குவதாக பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு..!

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இராஜினாமா செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று இரவு(21) முடிவடைந்துள்ளதனால், இன்று(22) அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவரை நீக்குவதற்கு ஜனாதிபதியிடம் உடன்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவரது அமைச்சுப் பதவிய ஐக்கிய தேசியக் கட்சிக்குரியது என்பதனால், அக்கட்சியிலுள்ள ஒருவருக்கு இப்பதவி வழங்கப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதகாவும் கூறப்படுகின்றது.

 

(rizmira)