விஞ்ஞான, தொழில்நுட்ப – ஆராய்ச்சி, திறன்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

விஞ்ஞான, தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலை நாட்டு மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று(27) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவிடமிருந்து நியமனக்கடிதத்தினை பெற்றுக்கொண்டார்.

இவர் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளார்.