டெல்லியில் திருமணத்திற்கு முந்தைய நாள் வேறு ஒரு நபருடன் உல்லாசமாக இருந்த 20 வயது மகளை தாய் கொலை செய்துள்ளார்.வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரீமா(20). அவருக்கு இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவர் தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
வெளியே சென்றிருந்த ரீமாவின் தாய் வீடு திரும்பியபோது மகள் வேறு ஒருவருடன் படுக்கையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே அந்த வாலிபர் தப்பியோடிவிட்டார். ரீமாவின் தாய் தலையணையை எடுத்து தனது மகளின் முகத்தில் வைத்து அவர் மூச்சுத் திணறி இறக்கும் வரை அழுத்தினார். உடனே தனது மகனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.திருமணத்திற்காக வீட்டில் இருந்த உறவினர்களிடம் ரீமாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினார். இதையடுத்து ரீமாவின் உடலை அவரது தாயும், சகோதரரும் சேர்ந்து லோக் நாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரீமா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அவர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து ரீமாவின் தாய் மற்றும் சகோதரரை இன்று கைது செய்தனர். ரீமாவுக்கும் அந்த வாலிபருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்த நிலையில் தான் அவருக்கும் காசியாபாத்தை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.ரீமாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு ரீமாவின் சகோதரர் ஒரு பேக்டரியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார்.