விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரினது விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகியோரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு – ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி, அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.