விடுமுறையினை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவை

(FASTNEWS  | COLOMBO) – ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் மலையகம் நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்வதனை முன்னிட்டு இம்முறையும் பதுளைக்கு செல்வதற்கு விசேட ரயில் சேவையை நடத்துவதற்கு ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று(06) முதல் கொழும்பில் இருந்து பதுளைக்கு விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் காலை 07.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணிக்கும்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் வழமையான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.