விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொழில் எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை தொழிலில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தகைமை பெற்றவர்களின் விபரங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி புதன் கிழமை வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தொழில்கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தற்போது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

நியமனக் கடிதங்கள் கிடைப்பது தாமதமாவதையிட்டு அச்சமடையத் தேவையில்லை எனவும் ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழில்வாய்ப்புக்களுக்காக தெரிவானவர்களின் முழு விபரங்களையும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கேற்ப பொதுத் தேர்தல் நடைபெற்று ஐந்து தினங்களுக்குப் பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.