விண்ணில் ஏவப்பட்ட செய்மதி ஒன்றை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில அமைச்சர்கள் கூறுவதனைப் போன்று பூதக் கண்ணாடியைக் கொண்டு குறித்த இந்த செய்மதியைப் பார்க்க முடியாது. செய்மதித் திட்டம் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ரோஹித்தவிடம் நேற்று(15) ஐந்தரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியிருந்தனர்.
குறித்த இந்த செய்மதித் திட்டத்திற்கு எவ்வாறு பணம் கிடைக்கப் பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய ரோஹித்த, இந்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் எந்தவொரு பணத்தையும் செலவிடவில்லை என ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
(rizmira)