“விதுல்கா” என்ற பெயரிலான மின்வலு, எரிசக்தி கண்காட்சி இன்று(17) ஆரம்பமாகிறது. இன்று தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.
அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
சகல துறைகளிலும் எரிசக்தி சார்ந்த செயற்றிறனை மேம்படுத்தி, புதுபிக்கக் கூடிய மின்வலு தொழில்நுட்பத்தை விருத்தி செய்வது கண்காட்சியின் நோக்கமாகும்.
இதனை இலங்கை சுனித்திய எரிசக்தி அதிகார சபை ஏற்பாடு செய்கிறது.