வித்தியாசமாக காதலை வெளிப்படுத்த முயன்று உயிரிழந்த இளைஞர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளைஞர் ஒருவர் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கிப் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று தான்சானியாவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் தன் தோழி கெனிஷாவுடன் தான்சானியா பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கி இருந்தார்.

தன் காதலை வித்தியாசமாக வெளிபடுத்த விரும்பிய குறித்த இளைஞர் தண்ணீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்துள்ளார்.

தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் தண்ணீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, மோதிரத்தை எடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன் வாழ்வில் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக கெனிஷா கூறியுள்ளார்.

குறித்த இந்த விடுதியானது தண்ணீருக்கடியில் 32 அடி ஆழத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.